2022 ஜூலை 04, திங்கட்கிழமை

பறக்க தயாராகிறது பறவை

J.A. George   / 2022 மே 03 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமலா பால் ஹீரோயினாக நடித்துள்ள படம் அதோ அந்த பறைவை போல. அவருடன் ஆசிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சர் நடித்துள்ளனர்.

அருண் ராஜகோபாலின் கதையை ஆர்.வினோத் இயக்கி உள்ளார். ஜேக்ஸ் பிஜோய் இசை அமைத்துள்ளார், சி.சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

காட்டுக்குள் மாட்டிக்கொண்ட அமலாபால் தனியொரு பெண்ணாக போராடி எப்படி தப்பிக்கிறார் என்கிற வகையிலான திரைப்படம். கொரோனா காலத்துக்கு முன்பே படப்பிடிப்பு முடிந்து விட்டது.

என்றாலும் சில பிரச்சினைகள் காரணமாக வெளிவராமல் இருந்தது. தற்போது வி ஸ்கொயர் எண்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது.

திரைப்படத்தின் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .