2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

பிரபல ஹொலிவூட் நடிகரின் கார் திரைப்படப் பாணியில் திருட்டு

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 30 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொதுவாக சாதாரண மக்கள் பயன்படுத்தும் வாகனங்கள் திருடப்படும் செய்திகளை நாம் பலரும் கேட்டிருப்போம்.

சாதரண நபர்கள் வீதி ஓரத்திலோ, வீட்டு முன்போ நிறுத்தும் போது இந்த திருட்டு நடைபெறும். அந்த வாகனங்கள் குறைந்த விலை  என்பதால் அதிக பாதுகாப்பு அம்சங்கள் இருக்காது.

ஆனால், ஹொலிவூட்டின் உட்ச நட்சத்திரமாக இருக்கும் ஒருவரது மிக விலைஉயர்ந்த சொகுசு கார் தொழில்நுட்ப உதவியைப் பயன்படுத்தி திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிஷன் இம்பாசிபிள் படத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமான நடிகர் டாம் குரூஸ். தற்போது அதன் 7ஆம் பாகத்தில் நடித்து வருகிறார்.

 இந்நிலையில் பர்மிங்காம் நகரில் உணவகம் ஒன்றில் நடந்த படப்பிடிப்பின்போது, அவர் தனது விலைஉயர்ந்த பி.எம்.டபிள்யூ எக்ஸ் 7 காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு சென்றார். சாவியின்றி கார் கதவை திறக்கவும், இயங்கவும் கூடிய வசதி கொண்ட அந்த கார் திருடப்பட்டுள்ளது.

பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட அந்த காரை ரேடியோ டிரான்ஸ்மிட்டரை பயன்படுத்தி திருடியுள்ளனர்.

எனினும் காரில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ் டிராகிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காவல்துறையினர் சில மணி நேரத்தில் காரை மீட்டனர்.

இருப்பினும் காருக்குள் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X