2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

நடிகை மீராவும் அவரது நண்பரும் கைது

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 15 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பற்றி அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டில் நடிகை மீரா மீதுன் மீது  7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த பொலிஸார், கேரளாவில் வைத்து அவரை  நேற்றைய தினம் கைது செய்தனர்.

இந்நிலையில், சென்னை அழைத்து வரப்பட்ட மீரா மிதுன், காவல் ஆணையர் அலுவலகத்தில் கெமராவை நோக்கி பொலிஸார்  தன்னுடைய கையை உடைத்துவிட்டதாக கூச்சல் போட்டவாறே சென்றார்.
 

எனினும் அவரது கதறலை சற்றும் பொருட்படுத்தாத பொலிஸார் அவரை வேகமாக உள்ளே அழைத்துச் சென்று, விசாரணையை ஆரம்பித்தனர்.  

இதன்போது விசாரணைக்கு ஒத்துழைக்காமலும், வழக்கிற்கு சம்பந்தமில்லாமலும் மீராமிதுன் ஏதேதோ பேசுவதாகவும், கமிஷ்னரை வரச்சொல்லி மீராமிதுன் அடம்பிடிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் , தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் குறித்து மீரா மிதுன் பேசியிருந்த வீடியோவில் உடனிருந்த அவரது நண்பர் அபிஷேக் ஷாம் என்பவரையும் கைது செய்துள்ள பொலிஸார்  தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 விசாரணைக்கு பின்னர், நடிகை மீரா மிதுனையும், அவரது நண்பரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X