2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

நடிகை குஷ்பூவா இது? வாயை பிளக்கும் ரசிகர்கள்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 22 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல நடிகையாக 90-களில் வலம் வந்தவர் நடிகை குஷ்பு.  இவர் ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு, சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். 

சினிமாவிற்கு பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றைத்  தொகுத்து வழங்கிய குஷ்பூ, ஒருசில நிகழ்ச்சிகளில்  நடுவராகவும் பங்கேற்றுள்ளார்.
அதுமட்டுமல்லாது   சின்னத்திரையிலும் தனக்கென ஓர் முத்திரை பதித்துள்ளார். 

தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் இவர் ஒரு சில படங்களிலும்  நடித்து வருகிறார்.  குறிப்பாக பல வருடங்கள் கழித்து ரஜினிகாந்த்-துடன் "அண்ணாத்த" திரைப் படத்தில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் உடற்பயிற்சிகள் மற்றும் யோகா பயிற்சிகள் மூலம் உடல் எடையைக் குறைத்துக்கொண்ட  குஷ்பூ தனது புதிய  புகைப்படத்தை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குறித்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் குஷ்பூவா இது? என ஆச்சிரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அப்புகைப்படத்தில் சின்னத்தம்பி படத்தில் உள்ள தோற்றத்தைப்  போன்று மிகவும் ஒல்லியாக காட்சியளிக்கிறார். இப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X