2022 மே 20, வெள்ளிக்கிழமை

மூட்டையில் சடலமாக கிடந்த பிரபல நடிகை அதிர்ச்சி சம்பவம்

J.A. George   / 2022 ஜனவரி 19 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர் நடிகை ரைமா இஸ்லாம் ஷிமு. அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். 

இதையடுத்து அவரை தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் திங்கட்கிழமை கேரனிகஞ்ச் பகுதியில் இருக்கும் ஹசரத்பூர் பாலத்திற்கு அருகில் ஒரு மூட்டை கிடந்தது. அந்த மூட்டையை பிரித்துப் பார்த்தபோது அதில் ரைமாவின் உடல் இருந்தது.

இது குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது, ரைமாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது உண்மை தான். பிரேத பிரசோதனைக்காக சர் சலிமுல்லா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ரைமாவின் மரணம் குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்றார்.

1998ம் ஆண்டு வெளியான பர்தாமேன் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரைமா. 45 வயதான அவர் இதுவரை 25 படங்களில் நடித்திருக்கிறார்.

படங்கள் தவிர்த்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் ரைமா. தொலைக்காட்சி தொடர்களை தயாரிக்கவும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .