2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

ஹிட் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ்

J.A. George   / 2021 ஓகஸ்ட் 31 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதாநாயகிகளை மையமாக வைத்து உருவாகும் திரைப்படங்களுக்கு பொலிவுட்டில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறன.

அந்த வகையில் கடந்த மாதம் கீர்த்தி சனோன் நடிப்பில் கடந்த மாதம் ஓடிடியில் வெளியான திரைப்படம் ‘மிமி’. இது கடந்த 2011ஆம் ஆண்டு மராத்தி மொழியில் வெளியான ‘மலா அய் ஹய்ச்சி’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும்.

இந்தத் திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். பரம் சுந்தரி பாடல் பட்டிதொட்டியெங்கும் கலக்கியது. கீர்த்தி சனோன் நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்தன.

இந்நிலையில், மிமி திரைப்படம் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இரண்டு மொழிகளிலுமே கீர்த்தி சனோன் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேசை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .