2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

எனது நிம்மதியே போய்விட்டது; செந்தில் புகார்

Ilango Bharathy   / 2021 ஜூன் 15 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் திரையுலகில் சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகத் திகழும்  செந்தில் இதுவரை 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கவுண்டமணியுடன் இவர் இணையும் நகைச்சுவை காட்சிகளுக்குத் தனியொரு ரசிகர் பட்டாளமே உண்டு.

சினிமாவைப் போல அரசியலிலும்  மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் பல ஆண்டுகள் அரசியலிலும்  ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் செந்தில், தனது பெயரில் டுவிட்டரில் உலா வரும் போலி கணக்கு குறித்து பொலிஸ் நிலையத்தில் புகாரொன்றை  அளித்துள்ளார்.

குறித்த புகாரில் ” போலிக் கணக்குகளினால் தனது நிம்மதியே போய்விட்டதாகவும், தன்னுடைய பெயரில் போலி கணக்கு தொடங்கிய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது பெயரிலுள்ள போலி டுவிட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என்றும் செந்தில் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .