2022 ஜனவரி 21, வெள்ளிக்கிழமை

கலராக மாறியது எப்படி? ரகசியத்தை கேட்ட ரசிகர்களுக்கு நடிகை கொடுத்த பதில்

J.A. George   / 2021 நவம்பர் 30 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலமாக மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நந்தினி. 

அதன் பின்னர் பல்வேறு சீரியல்களில் நடித்து வந்த இவர் தொகுப்பாளினியாக சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

முதல் திருமணம் செய்துகொண்டு இவரது கணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், சீரியல் நடிகரான யோகேஷை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார். 

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் சீரியல்களிலும் நடித்து வருகிறார். நடிக்க வந்த புதிதில் கருப்பாக இருந்த மைனா நந்தினி தற்போது கலராக மாறி பளபளவென மின்னுகிறார். 

இவருடைய கலர் மாற்றத்திற்கு என்ன காரணம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் மைனா நந்தினி என்னுடைய கலர் சேஞ்சுக்கு ஏபிசி ஜூஸ் தான் காரணம் என கூறியுள்ளார். 

அதாவது ஆப்பிள், பீட்ரூட், கேரட், இஞ்சி மற்றும் புதினா ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து வாரம் இரண்டு முறை குடித்து வந்தால் கலர் சேஞ்ச் ஆகும் என தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X