2022 ஓகஸ்ட் 15, திங்கட்கிழமை

கீர்த்தி சுரேஷ் இன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

Freelancer   / 2022 ஜூன் 26 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தற்போது மாமன்னன் எனும் திரைப்படம் தமிழில் உருவாகி வருகிறது.

மாரி செல்வராஜ் இயக்கும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் பாசில், வடிவேலு ஆகியோர் நடிக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதுதவிர்த்து தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் போலோ ஷங்கர் படத்திலும் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி. தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை அதில் பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார்.

அந்த வகையில் தற்போது வெள்ளை நிற உடை அணிந்து, கண்களால் ரசிகர்களை கவரும் அழகிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இன்ஸ்டாகிராமில் இவர் பதிவு செய்துள்ள இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் படு வைரலாகி வருகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .