J.A. George / 2021 மார்ச் 26 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாணி ராணி உள்ளிட்ட ஒரு சில சீரியல்களில் நடித்த சீரியல் நடிகை ஒருவர் தனக்கு தங்கை பிறந்திருப்பதாக வீடியோ ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவருக்கு தற்போது 19 வயது ஆகியிருக்கும் நிலையில் தனது அம்மா கர்ப்பமாக இருப்பதாகவும் விரைவில் குழந்தை பிறக்கும் என்றும் தனக்கு ஒரு தங்கை பிறக்க போகிறார் என்றும் கடந்த சில வாரங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோவில் தனது அம்மாவுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும், எனக்கு ஒரு அன்பு தங்கை பிறந்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அனைவரும் தனது தங்கைக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்றும் உங்களது அனைவரது ஆசிர்வாதமும் அவருக்கு தேவை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஒருசிலர் சர்ச்சைக்குரிய கமெண்ட்ஸ்களை பதிவு செய்திருந்த நிலையில், ‘இது போன்ற குப்பை கமெண்ட்ஸ்கள் குறித்து நான் கவலைப்படப் போவதில்லை, எனவே இங்கே வந்து உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்’ என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.
8 minute ago
25 minute ago
32 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
25 minute ago
32 minute ago
2 hours ago