2022 ஜூலை 02, சனிக்கிழமை

ஒரே திரைப்படத்தில் மூன்று ஹீரோயின்கள்

J.A. George   / 2022 ஜனவரி 25 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் விஜய் அன்டனி தற்போது ’தமிழரசன்’ ’அக்னிசிறகுகள்’ ’பிச்சைக்காரன் 2’ ’கொலை’ உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விஜய் அன்டனி நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படத்துக்கு ’ரத்தம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ’ரத்தம்’ திரைப்படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்க போவதாக இயக்குநர் சி.எஸ்.அமுதன் தெரிவித்துள்ளார். ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா மற்றும் மஹிமா நம்பியார் ஆகிய மூன்று ஹீரோயின்கள் இந்தத் திரைப்படத்தில் நடிக்கின்றனர்.

எனினும், மூவரும் நடித்தாலும் விஜய் அன்டனிக்கு ஜோடியாக ஒருவர் மட்டுமே நடிக்க போகிறார் என்றும் அவர் யார் என்பது திரைப்படத்தைப் பார்த்தால் தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதல்கட்ட படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் கொல்கத்தா செல்ல உள்ளதாகவும் அங்கு 30 சதவீத படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .