2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

ஷிவானி வீட்டுக்கு புதுவரவு

J.A. George   / 2021 டிசெம்பர் 07 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஷிவானி நாராயணன் சிங்கப்பெண்ணாக வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஷிவானி நாராயணன் பல புகைப்படங்களை பதிவு செய்து வருவார். இந்த நிலையில், அவர் தனது வீட்டுக்கு புதிய உறுப்பினர் ஒருவர் வந்திருப்பதாக அறிவித்துள்ளார்.

அதுதான் அவர் புதிதாக வளர்க்க இருக்கும் செல்ல நாய் குட்டி. ஏற்கெனவே அவர் இரண்டு நாய்க் குட்டிகளை வளர்த்து வரும் நிலையில் தற்போது புதிய நாய்க்குட்டி ஒன்று வாங்கி வளர்க்க உள்ளார்.

அதை கையில் தூக்கி வைத்துக்கொண்டு காட்டும் புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .