2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்.. கமலுக்கு பதிலாக இந்த பிரபல நடிகையா?

J.A. George   / 2021 நவம்பர் 26 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

ஆனால் சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்த அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்பதால் அடுத்த இரு வாரங்களுக்கு அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாத சூழல் உருவானது.

அவருக்கு பதிலாக ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்கப் போகிறார் என தகவல் வெளியானது. அதன் பிறகு விஜய் சேதுபதி, சூர்யா, சிம்பு என பல நடிகர்களின் பெயர்கள் அடிபட்டன. 

மேலும் கமலே வீடியோ கான்பரன்ஸ் மூலமாக தொகுத்து வழங்கப் போகிறார் எனவும் சொல்லப்பட்டது.

இப்படியான நிலையில் தற்போது கமலுக்கு பதிலாக அடுத்த இருவாரங்களுக்கு பிரபல நடிகையான ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்க போகிறார் என லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

ஆனால் இதுவும் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .