2023 மார்ச் 30, வியாழக்கிழமை

“இந்த ஆணுறையை பயன்படுத்துங்கள்” காஜல்

Editorial   / 2023 பெப்ரவரி 06 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சமீப காலமாக பிரபலமாக இருக்கும் நடிகைகள் பலரும் அவ்வப்போது சர்ச்சையான விளம்பரங்களில் நடித்து சிக்கிக் கொள்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் பூமி மற்றும் ஈஸ்வரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை நிதி அகர்வால் ஆணுறை விளம்பரம் ஒன்றில் நடித்த பெண்கள் பற்றிய.. சில ரகசியமான.. வெளியே சொல்ல கூச்சப்படக்கூடிய.. சில விஷயங்களை வெளிப்படையாக பேசி அந்த விளம்பரத்தை வெளியிட்டு இருந்தார்.

இது மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நடிகை காஜல் அகர்வால் குறித்த ஒரு தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே நடிகை காஜல் அகர்வால் ஆணுறை விளம்பரம் ஒன்றில் நடிக்க இருந்தார் என்றும் சில பிரச்சனைகள் காரணமாக அந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்துவிட்டார் காஜல் அகர்வால் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பிரபல நடிகை சன்னி லியோன் ஒரு ஆணுறை விளம்பரத்தில் நடித்திருந்தார். இந்த விளம்பர படங்களை மெட்ரோ ரயிகள்.. ரயில் நிலையங்கள் பொது இடங்கள் என போஸ்டரில் ஒட்டி வைத்து அதகளம் செய்தது அந்த ஆணுறை தயாரிப்பு நிறுவனம்.

ஆணுறை விளம்பரம் தவறு கிடையாது. ஆனால் அதில் தோன்றக்கூடிய நடிகைகள் இப்படியா அநியாயத்துக்கு கவர்ச்சியான உடைகளை அணிவார்கள் என்று கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன.

அவர்கள் கவர்ச்சியான உடைகள் அணிந்து கொள்ளட்டும் ஆனால் பொது இடங்களில் இப்படி ஓட்டுவது மிகவும் தவறானது என்ற சர்ச்சை எழுந்தது. இதனால் பயந்து போன அடியை காஜல் அகர்வால் எங்கே தனக்கும் அப்படி ஒரு நிலைமை வந்து விடுமோ என்று அந்த விளம்பரத்திலிருந்து விலகினார்.

மேலும், வாங்கிய அட்வான்ஸ் தொகையான இரண்டு கோடி ரூபாயையும் திருப்பி கொடுத்து விட்டார் என்று கூறப்பட்டது. ஆனால், தற்பொழுது திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கு தாயும் வாங்கி இருக்கும் நடிகை காஜல் அகர்வால் மீண்டும் ஆணுறை விளம்பரத்தில் இந்த ஆணுரையை பயன்படுத்துங்கள் என்ற வசனத்துடன் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .