2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

மாநாடு வசூல் எவ்வளவு தெரியுமா? திக்கித் திணறும் பாக்ஸ் ஆபீஸ்!

J.A. George   / 2021 நவம்பர் 30 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் மாநாடு.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

படத்தில் சிம்புவுக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் ஒய் ஜி மகேந்திரன், எஸ் ஏ சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா, கருணாகரன், யோகி பாபு என பலர் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 14 கோடி வசூல் செய்த இந்தப் படம் இரண்டு நாளில் 22 கோடி வசூல் செய்தது. 

இந்த நான்கு நாள் முடிவில் படம் மொத்தமாக 30 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .