2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

வெப் தொடரில் த்ரிஷா

J.A. George   / 2021 ஒக்டோபர் 19 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றால் சினிமா துறை முடங்கிபோயுள்ள நிலையில், ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு மவுசு கூடி உள்ளது.

இந்த தொடர்கள் திரைப்படங்களைப்போல் காதல், ஆக்‌ஷன், மர்மம், பிரம்மாண்டம் என்று ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருப்பதாக பாராட்டுகள் கிடைத்துள்ளன.

இதில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு சினிமாவை விட அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது.  இதனால் நடிகைகள் பார்வை வெப் தொடர்கள் பக்கம் திரும்பி உள்ளது.

ஏற்கெனவே மீனா, காஜல் அகர்வால், நித்யா மேனன், ரம்யா கிருஷ்ணன், சோனியா அகர்வால், சமந்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் வெப் தொடர்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், நடிகை த்ரிஷாவும் வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அவர் நடிக்கும் முதல் வெப் தொடருக்கு ‘பிருந்தா’ என பெயரிடப்பட்டு உள்ளது.

தெலுங்கில் தயாராகும் இந்த வெப் தொடரை தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். சூர்யா வங்கலா இயக்கும் இந்த வெப் தொடரில் நடிகை த்ரிஷா துப்பறியும் பொலிஸ்  அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X