2021 ஒக்டோபர் 28, வியாழக்கிழமை

‘நாய் சேகர்’ திரைப் படத்தில் பிரபல நடிகை

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 12 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படப்பிரச்சனை காரணமாக பிரபல நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு கடந்த நான்கு வருடங்களாக சினிமாவில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது

சமீபத்தில் இப் பிரச்சனையானது  லைகாவின்  தலையீட்டால் தீர்க்கப்பட்டதுஅதனைத் தொடர்ந்து லைகா தயாரிப்பில் தொடர்ச்சியாக வடிவேலு நடிக்கும் படங்கள் வரவிருக்கின்றனஇதில் முதல் படமாக நாய் சேகர் தயாராகிறது.

இந்நிலையில்  அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த வடிவேலு ’நாய் சேகர்’ என்ற தலைப்பில்  பிரச்சினை இருப்பதாகவும், இது  குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும்,  விரைவில் அந்த தலைப்பு  எங்களுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ’நாய் சேகர்’ படத்தில் பிரபல  நடிகை ஒருவர் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றும், ஆனால்அவர்  இப் படத்தில் எனக்கு ஜோடி கிடையாது என்றும் தெரிவித்தார்.

மேலும் ஷங்கர் படத்தில் இனி நடிக்க மாட்டேன் என்று தெரிவித்த அவர்  இனிமேல்  வரலாற்று கதைகளிலும் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களைச் சந்தித்த பின்னர் தான் எனக்கு நல்ல காலம் ஏற்பட்டது என்றும் அனைத்து பிரச்சனைகளையும் சுமுகமாகத் தீர்த்து விட்டதால் இனிமேல் என்னுடைய பயணம் நல்லபடியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .