2025 மே 17, சனிக்கிழமை

எனக்கென யாரும் இல்லையே

George   / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எனக்கு திருமணம் என்று வெளியான செய்திகளில் உண்மை இல்லை. தொழிலதிபரை நான் காதலிக்கிறேன் என்கிறார்கள். அதுவும் வதந்திதான். இதுவரை யாரையும் நான் காதலிக்கவில்லை. தனியாகத்தான் இருக்கிறேன். சினிமாவில்தான் என் முழு கவனமும் இருக்கிறது. எனவே, திருமணத்துக்கு நான் அவசரப்படவில்லை என நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதாக செய்தி வெளியானதுடன் இவரது தங்கை நிஷாவுக்கு ஏற்கெனவே திருமணம் முடிந்துள்ளதால், காஜல் அகர்வால் திருமணத்தையும் உடனடியாக முடித்துவிட பெற்றோர்கள் வரன் பார்ப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், காஜல் அகர்வால் ஒரு இளைஞருடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வெளிவந்தன.

அந்த இளைஞர் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் என்றும், இருவரும் காதலிக்கிறார்கள் என்றும் தெலுங்கு திரைப்படவுலகில் கிசுகிசுக்கப்பட்டது. காஜல் அகர்வாலுக்கும் சொந்த ஊர் மும்பை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே, நான் ஒரு தொழில் அதிபரைத்தான் மணப்பேன், அவர் அதிகம் படித்தவராகவும், நகைச்சுவை உணர்வும் உள்ளவராகவும் இருக்கவேண்டும் என்று காஜல் கூறியிருந்தார்.

எனவே, மும்பை தொழிலதிபரைத்தான் அவர் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்று கூறப்பட்டது. திருமணம் முடிவாகி விட்டதால் அவரை புதிய திரைப்படங்களில் நடிக்க வைக்க இயக்குநர்கள் தயங்குவதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து திருமணம் பற்றிய செய்திக்கு காஜல் அகர்வால் விளக்கம் அளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .