2025 மே 12, திங்கட்கிழமை

250 திரையரங்குகளில் பாட்ஷா மறுவெளியீடு

George   / 2017 பெப்ரவரி 19 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த “பாட்ஷா”, திரைப்படம் 1995ஆம் ஆண்டு வெளியாகி அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா விரும்பினாலும் அதற்கு ரஜினி உடன்படவில்லை. பாட்ஷாவையே ரீமேக் செய்ய விரும்பினார். "ஒரே ஒரு பாட்ஷா அதுமாதிரி இனி உங்களாலும் இயக்க முடியாது என்னாலும் நடிக்க முடியாது" என்று, கூறிவிட்டார்.

இதனால், “பாட்ஷா” திரைப்படத்தையே நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள். டிஜிட்டல்படுத்தி 5.1 சவுண்ட் டிராக் இணைத்திருக்கிறார்கள். மார்ச் மாதம் 3ஆம் திகதி சத்யா மூவீஸ் வெளியிடுகிறது.

சென்னையில் மட்டும் புதிய திரைப்படங்களுக்கு இணையாக 30 திரையரங்குகளிலும்  தமிழ்நாடு முழுவதும் 250 திரையரங்குகளிலும் திரையிடப்பட இருக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X