2025 மே 14, புதன்கிழமை

'தாராளமாக' நடிச்சுட்டோமே... விரக்தியில் பூனம்

George   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை பூனம் பஜ்வா, தற்போது சோர்ந்து போயுள்ளாராம். இதற்கு முத்தின கத்திரிக்காய்  தான் காரணமாம். (என்னது முத்தின கத்திரிக்காயா? என்று ஆர்வத்துடன் பார்ப்பவர்களுக்கு.... சாரி பாஸ்..)

முத்தின கத்திரிக்காயின் வெற்றியை ரொம்பவே எதிர்பார்த்து காத்திருந்த பூனம் பஜ்வா அந்த திரைப்படம், பெரிய அளவில் வரவேற்பை பெறாததால், சோர்ந்து போயுள்ளார்.

'கவர்ச்சியாக நடித்தால், கோலிவூட்டில் அதிக வாய்ப்பு கிடைக்கும்' என, யாரோ சிலர் கூறியதால் தான், அண்மைக்கால திரைப்படங்களில், கவர்ச்சி கொடியை பறக்க விட்டிருந்தார்.

ஆனால், பூனம் பஜ்வாவின் கவர்ச்சியை, கோலிவூட் ரசிகர்கள் பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை. தற்போது, மலையாளம், தமிழில், தலா ஒரு திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

'தாராளமாக நடித்து விட்டதால், இனிமேல் ஹீரோயின் வாய்ப்பு தேடி வருவது கஷ்டம் தான்' என, அவர் காதுபடவே, சிலர் கிசு கிசுப்பதால் விரக்தியில் உள்ளார் பூனம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .