Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
George / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நயன்தாராவை நான் காதலிக்கவில்லை என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். என்னடா புதுக்கதையாக இருக்கிறது என்று ஆச்சரியப்படாதிங்க...
“காஷ்மோரா” திரைப்படத்தில் நடிகை நயன்தாராவுடன் காதல் காட்சிகள் இல்லை, நன்தாராவை நான் காதலிக்கவில்லை என்று கார்த்தி கூறியுள்ளார்.
மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிகர் கார்த்தி நடித்துள்ள “காஷ்மோரா” திரைப்படம் எதிர்வரும் தீபாவளி தினத்தில் திரைக்கு வெளிவரவுள்ள நிலையில் இந்த திரைப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கோலிவூட்டின் முன்னணி நாயகிகளான நயன்தாரா, ராணி ரத்தினம்மா தேவி கேரக்டரிலும், ஸ்ரீதிவ்யா, ஆராய்ச்சியாளர் வேடத்திலும் நடித்துள்ளனர். ஆனால் கார்த்திக்கும் இந்த இரண்டு ஹீரோயின்களுக்கும் இடையே ரொமான்ஸ் காட்சிகளே இல்லையாம். இந்த தகவலை கார்த்தி கூறியுள்ளார்.
பிரமாண்டமான செட்களில் எக்ஷன், ஹொரர், கொமடி காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளதாகவும், ரொமான்ஸ் இல்லாத குறையே தெரியாமல் திரைப்படம் விறுவிறுப்பாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago