Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
George / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
“எனது சினிமா வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சினிமாவில் அறிமுகமான நாட்களில் எனக்கு எந்த திட்டமும் இல்லை. முன்னணி கதாநாயகியாக வருவேன் என்றோ, சினிமாதான் என் உலகம் என்றோ நினைத்துப் பார்க்கவில்லை” என தமிழ், தெலுங்கில் முன்னணி இடத்தில் இருக்கும் காஜல் அகர்வால், தெரிவித்துள்ளார்.
“இப்போது தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் ஓய்வு இல்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறேன். ரசிகர்களிடம் நல்ல நடிகை என்று பெயர் வாங்கி இருக்கிறேன். முன்பு இயக்குநர்கள் சொல்லிக் கொடுத்ததை செய்தேன். அடுத்த திரைப்படத்தில் இனி நடிப்பேனா என்றுதான் அப்போது நினைத்தேன். ஆனால் காலம் என்னை நிரந்தர நடிகையாக்கிவிட்டது.
இப்போது திரைப்படவாய்ப்புகள் குவிகின்றன. என்னை அனுபவம் உள்ள நடிகை என்கிறார்கள். எனவே, இனிபக்குவத்துடன் நடந்து கொள்ளும் எண்ணம் வந்திருக்கிறது. இனி கிடைக்கிற திரைப்படங்களில் எல்லாம் நடிக்க மாட்டேன்.
நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தேர்வு செய்து நடிப்பேன். என் மனதுக்கு பிடித்த கதாபாத்திரங்களில் தான் நடிப்பேன். புதிய முயற்சிகளில் இறங்குவேன். கதைகளை நிதானமாக தேர்வு செய்வேன். முன்பு போல் ஓடிக்கொண்டே இருக்க மாட்டேன். வாழ்க்கை மிகவும் சிறியது. ஒவ்வொரு விநாடியையும் அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago