2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

'ஸ்டார் வார்ஸ்' ஹீரோயின் காலமானார்

George   / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவை சேர்ந்த நடிகை கேர்ரி ஃபிஷர், நெஞ்சுவலி காரணமாக, சிகிச்சை பலனின்றி தனது 60ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.

உலகப் புகழ் பெற்ற “ஸ்டார் வார்ஸ்” திரைப்படங்களில் இளவரசி லியா கதாபாத்திரத்தில் நஎத்தன் ஊடாக கேர்ரி ஃபிஷர், நன்கு அறியப்பட்டவர்.

பிரிட்டனில் படப்பிடிப்பில் இருந்த போது கடந்த சனிக்கிழமை, நெஞ்சுவலி ஏற்பட்டு, அங்கிருந்து அமெரிக்காவின் லொஸ் ஏஞ்செல்ஸுக்கு கொண்டு வரப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பிறகு செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில்(அமெரிக்க நேரப்படி) அவர் மரணமடைந்தார்.

அவரது மகள், குடும்ப செய்தி தொடர்பாளர் வழியாக இந்த தகவலை தெரிவித்துள்ளார். போதைப் பொருள் பழக்கத்தாலும், தொடர் பணிச் சுமை காரணமாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தார் கேர்ரி ஃபிஷர்.

ஃபிஷர், கதையாசிரியர், தயாரிப்பாளர், வசனகர்த்தா மற்றும் பேச்சாளர் என்ற பல்வேறு பரிணாமங்களை கொண்டவர். 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 1969ஆம் ஆண்டு முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X