2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

'காஷ்மோரா', கொடி' சென்னை வசூல் விவரம்

George   / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீபாவளி தினத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான கார்த்தியின் “காஷ்மோரா” மற்றும் தனுஷின் “கொடி” ஆகிய திரைப்படங்கள் தமிழகம் முழுவதும் திருப்திகரமான வசூலை கொடுத்து வரும் நிலையில் சென்னை வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் தனுஷின் “கொடி” திரைப்படம் 23 திரையரங்க வளாகங்களில் 350 காட்சிகள் திரையிடப்பட்டு இந்தி ரூ.1,44,15,880 வசூலாகியுள்ளது. திரையரங்குகளில் 95% பார்வையாளர்கள் நிரம்பியிருந்ததால் நல்ல ஆரம்ப வசூல் கிடைத்துள்ளது.

கார்த்தியின் “காஷ்மோரா” திரைப்படம் சென்னையில் 17 திரையரங்கு வளாகங்களில் திரையிடப்பட்டு 302 காட்சிகள் ஓடியுள்ளது. முதல் நாளில்  இந்திய ரூ.1,18,56,420 வசூல் செய்துள்ளது. மேலும், திரையரங்குகள் 95% நிரம்பியிருந்தது.

கார்த்தியின் திரைப்படங்களில் இந்த திரைப்படம் நல்ல ஆரம்ப வசூலை கொடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X