2025 மே 12, திங்கட்கிழமை

'சாமி 2' டைட்டில் லோகோ வெளியானது

George   / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

விக்ரம் நடிக்கவுள்ள 'சாமி 2' திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த திரைப்படத்தின் டைட்டில் லோகாவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

'இருமுகன்' படத்தை தயாரித்த சிபுதமீன்ஸ்  தயாரிக்கின்றார். இந்த திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் இயக்குநர் ஹரி தீவிரமாக இருப்பதாகவும், கௌதம் மேனனின் 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் படப்பிடிப்பை விக்ரம் முடித்தவுடன் ஹரியுடன் அவர் இணைந்து 'சாமி 2' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

முதல் பாகத்தில் நடித்த த்ரிஷா மற்றும் ஒரு முன்னணி நாயகி ஆகியோர் நாயகிகளாக நடிக்கவுள்ளதாகவும், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த முழுதகவல் இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X