2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

'நட்புன்னா என்னன்னு தெரியுமா உனக்கு?'

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏற்கெனவே ரஜினியின் புகழ்பெற்ற வசனமான 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' என்ற வசனத்தைத் தலைப்பாகக் கொண்டு ஒரு திரைப்படம் அண்மையில் வெளியாகிய நிலையில் தற்போது ரஜினி திரைப்பட வசனத்தையே தலைப்பாகக் கொண்டு இன்னொரு திரைப்படம் உருவாக்கப்படவுள்ளது.

ரஜினி மற்றும் மம்முட்டி நடித்த 'தளபதி' திரைப்படத்தில் 'நட்புன்னா என்னன்னு தெரியுமா உனக்கு?' என்று ரஜினி, மம்முட்டியிடம் ஒரு வசனம் பேசியிருப்பார். இந்தப் புகழ்பெற்ற வசனமான 'நட்புன்னா என்னன்னு  தெரியுமா?' என்ற தலைப்பில் தற்போது ஒரு திரைப்படம் உருவாகவுள்ளது.

பீட்சா, சேதுபதி உட்பட பல திரைப்படங்களில் நடித்த ரம்யா நம்பீசன் இந்தத் திரைப்படத்தின் நாயகியாகவும் இவருக்கு ஜோடியாகத் தொலைக்காட்சியில் வர்ணனையாளராகப் பணிபுரிந்த கவினும் நடிக்கவுள்ளனர்.

நெல்சனின் உதவியாளர் சிவகுமார் இயக்கவுள்ள இந்தத் திரைப்படத்துக்கு தரண் இசையமைக்கவுள்ளார். லிப்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் வனிதா பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X