2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

'பாகுபலி 2' காட்சிகள் லீக்

George   / 2017 ஏப்ரல் 27 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா நடிப்பில் உருவாகியுள்ள “பாகுபலி 2” என்ற பெரும் எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி இந்த திரைப்படத்தின் இரண்டு நிமிட காட்சிகள் சமூகவலைத்தளங்கள் மற்றும் இணையதளங்களில் லீக் ஆகியுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்

இந்த இரண்டு நிமிட காட்சியில் பிரபாஸ், ராணா, சத்யராஜ் குறித்த காட்சிகள் இருப்பதாக தெரிகிறது.

இந்திய ரூ. 1,000 கோடி வியாபார மதிப்புள்ள ஒரு திரைப்படத்தின் சில காட்சிகள் வெளியீட்டுக்கு முன்பே வெளியாகியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த காட்சிகள் பிரிவியூ திரையரங்கில் அல்லது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெறும்போது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X