George / 2017 ஏப்ரல் 27 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

“பாகுபலி 2” திரைப்படம் உலகமெங்கும் நாளை பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.
பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் என 4 மொழிகளில் வெளியாக உள்ள இத்திரைப்படம் இந்தியா முழுவதும் 6500 திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.
இந்நிலையில், திரைப்படம் திரையிடப்படுவதற்கு ஒருநாள் முன்னதாக, அதாவது இன்று திரைப்படத்தின் ப்ரீமியர் காட்சியை திரையிட படக்குழு முடிவு செய்திருந்தது.
அதன்படி இன்று இரவு வெளியாகவிருந்த ப்ரீமியர் காட்சி இரத்துச் செய்யப்படுவதாக பொலிவூட்டின் பிரபல இயக்குநரும், “பாகுபலி 2” திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவருமான கரன் ஜோஹர், தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பொலிவுட்டின் பிரபல நடிகர் வினோத் கண்ணா, உடல்நலக்குறைவால் மும்பையில் இன்று காலை காலமானார்.
அவரது மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, “பாகுபலி 2” படக்காட்சிகள் இரத்துச் செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
2 hours ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Nov 2025