2021 ஜூன் 21, திங்கட்கிழமை

1 பில்லியன் நட்டஈடு கோரும் ரைசா

Editorial   / 2021 ஏப்ரல் 22 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவையில்லாத சிகிச்சையளித்து தன் முகத்தை அலங்கோலமாக்கியதற்காக 1 பில்லியன் ரூபாய்  நஷ்டஈடு கோரி, நடிகை ரைசா வில்சன் டாக்டர் பைரவி செந்திலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா வில்சன் தற்போது கோலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இந்நிலையில் ஃபேஷியல் செய்ய சென்ற இடத்தில் தன்னை கட்டாயப்படுத்தி டாக்டர் பைரவி செந்தில் தேவையில்லாத சிகிச்சை அளித்ததாக,  ரைசா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

இதற்கமைய,15 நாட்களில்  1 பில்லியன் ரூபாய் தராவிட்டால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று ரைசாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .