2022 ஜூலை 04, திங்கட்கிழமை

10 வருடங்களுக்கு பின் மாறாதது இது ஒன்று தான்!

Freelancer   / 2022 மே 27 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக நாயகன் கமலஹாசனுடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து,  பத்து வருடங்களுக்குப் பின்னும் மாறாதது இது ஒன்றுதான் என்று நடிகை ஆண்ட்ரியா பதிவு செய்துள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'விஸ்வரூபம்' திரைப் படத்தின் படப்பிடிப்பின்போது கமல்ஹாசனுடன் பூஜா குமார் மற்றும் ஆண்ட்ரியா எடுத்த புகைப்படத்தை,  ஆண்ட்ரியா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். 

மேலும், அந்த புகைப்படத்தில் ஆண்ட்ரியா கட்டியிருந்த அதே சேலையை தற்போது அணிந்துஇ 10 வருடங்களுக்கு முன் அணிந்த அதே சேலை மீண்டும்' என கேப்ஷனாக பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. குறிப்பாக நீங்கள் 10 வருடங்களுக்கு முன் எப்படி இருந்தீர்களோஇ அப்படியே இருக்கிறீர்கள்இ உங்கள் அழகு கொஞ்சம் கூட குறையவில்லை' போன்ற கமெண்ட்ஸ் அதிகமாக பதிவாகி விடுகிறது.

இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா தற்போது 'பிசாசு 2' உள்பட மொத்தம் எட்டு தமிழ் படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவை வரிசையாக வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .