Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 19 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திகதியாகக் கருதப்படும் 2011.11.11இல் பிரசவம் நடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையே ஐஸ்வர்யா ராய் மற்றும் பச்சன் குடும்பம் விரும்புவதால்இ அதற்கேற்ப ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரியவருகிறது. இந்நிலையில்இ நடிகை ஐஸ்வர்யா ராயின் பிரசவத்தை வைத்து பல கோடி ரூபாய் பந்தயம் ஆரம்பமாகியுள்ளது. ஏராளமான பந்தயக்காரர்கள் இந்த பந்தயத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அபிஷேக்பச்சனை திருமணம் செய்த ஐஸ்வர்யா ராய் தற்போது 9 மாதம் கர்ப்பமாக உள்ளார். நேற்று மும்பையில் உள்ள வீட்டில் அவருக்கு ஆடம்பரமாக வளைகாப்பு விழா நடந்தது. இதில் அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், உறவினர்கள் மற்றும் பாலிவுட் நடிகைகள் பங்கேற்றனர். அப்பாவாகும் சந்தோஷத்தில் உள்ள அபிஷேக் பச்சன்இ இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்புகளை முடித்து விட தீவிரம் காட்டுகிறார். பிரசவத்தின் போதும்இ அதற்கடுத்த தினங்களிலும் ஐஸ்வர்யாராய் மற்றும் குழந்தையுடன் இருக்க திட்டமிட்டுள்ளார் அபிஷேக் பச்சன்.
இதற்கிடையேஇ ஐஸ்வர்யா ராய்க்கு நவம்பர் இரண்டாவது வாரத்தில் குழந்தைப் பிறக்கலாம் என டாக்டர்கள் திகதி குறித்துள்ளனர். நவம்பர் மாதம் 11ஆம் திகதிக்குள் அவருக்கு பிரசவம் நடக்கலாம் என டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திகதியாகக் கருதப்படும் 11௧1௧1 அன்று அவரது பிரசவம் நடக்க வேண்டும் என ஐஸ்வர்யா ராய் மற்றும் பச்சன் குடும்பம் விரும்புவதால், அதற்கேற்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இருந்தாலும் குழந்தையின் பிரசவத் திகதி யார் கையிலும் இல்லை அல்லவா? அமிதாப்பச்சனின் மொத்த குடும்பமும் குழந்தையை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறது. அவருக்குப் பெண் குழந்தைதான் பிறக்கும் என சில ஜோதிடர்கள் கணிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும் இந்தப் பிரசவம் 11ஆம் திகதிதான் நடக்கும் என மேலும் சில ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
ram Saturday, 22 October 2011 10:06 PM
yaar enna sonnaalum iraivan naattappadiye ellaam nadakkum....
Reply : 0 0
AMR RDA Tuesday, 01 November 2011 04:31 PM
பாப்போம் இறைவன் என்ன முடிவு எடுத்துள்ளான் என்று.
Reply : 0 0
akeel akeel ahamed Saturday, 12 November 2011 03:37 AM
கட்டாயம் பிள்ளை கிடைக்கும்
Reply : 0 0
ansari Monday, 14 November 2011 03:13 PM
எல்லாம் இறைவனின் விதிப்படிதான் நடக்கும்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago