Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 09 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவில் இப்போது அதிக படங்களை கைவசம் வைத்துக்கொண்டு முன்னணியில் இருப்பவர் இளம் நடிகை ஹன்ஸிகா மோத்வானி. இவர் நடித்த வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற திரைப்படங்கள் வெகுவிரைவில் வெளியாகவுள்ளன. இந்தத் திரைப்படங்களும் வெளியான பிறகு இன்னும் பிஸியாகிவிடுவார் ஹன்ஸிகா என்கிறது திமிழ் சினிமா உலகம்.
இந்நிலையில், திருமணம் ஆகாமலே 20 குழந்தைகளுக்கு அன்பான 'அம்மா'வாக மாறியிருக்கிறார் ஹன்ஸிகா. அதாவது 20 குழந்தைகளை தத்தெடுத்து, அவர்களுக்கு தாயாக மாறியுள்ளார்.
மும்பையில் 19 ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்திருந்த ஹன்ஸிகா, அண்மையில் 20ஆவது குழந்தையை தத்தெடுத்துள்ளார் இவர்களுக்கு வெறும் பண உதவி மட்டும் செய்யாமல், படப்பிடிப்பு தவிர்த்த மற்ற நேரங்களில் இந்தக் குழந்தைகளை பீச், பார்க், சினிமா என வெளியில் அழைத்துப் போய் தேவையானதை வாங்கிக் கொடுத்து சந்தோஷப்படுத்துகிறாராம் ஹன்ஸிகா.
இதுகுறித்து அவரிடம் கருத்து கேட்டபோது, 'இந்தக் குழந்தைகளை ஒரு தாயைப் போலவே பார்த்துக்கொள்ள விரும்புவதாகக்' கூறினார். ஹன்ஸிகா இப்போதுதான் 20ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். தனது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில்தான் இந்த 20 பிள்ளைகளையும் தத்தெடுத்ததாகக் கூறியுள்ளார்.
kalkudah adam Saturday, 13 August 2011 04:38 AM
மனித நேயம்
Reply : 0 0
hamsa Wednesday, 17 August 2011 03:23 PM
No one can become until otherwise they bear a child in their womb and become mother, then only real they would realize what is motherhood, merely just adopting child can not be compared with motherhood .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago