Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
A.P.Mathan / 2010 நவம்பர் 29 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
தயாரிப்பில் தனக்கென தனியிடத்தினை உருவாக்கி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டான்லின் இப்பொழுது நடிப்பதற்கும் ஆயத்தமாகிவிட்டார். ஏற்கனவே உதயநிதியை கே.எஸ்.ரவிக்குமார் திரையில் காண்பித்திருந்தார். ஆனால் இப்பொழுது கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பினையும் உதயநிதி பெற்றிருக்கிறார்.
இயக்குநர் ராஜேஸின் இயக்கத்தில் உருவாகும் 'நண்பேன்டா..' படத்தில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார் உதயநிதி. இவருக்கு ஜோடியாக யாரைப் போடலாம் என யோசித்த இயக்குநர் ராஜேஸ், உடனடியாகவே கமலின் வாரிசு ஸ்ருதியை சிபாரிசு செய்திருக்கிறார்.
ஸ்ருதி இப்பொழுது சூர்யாவுடன் '7ஆம் அறிவு' படத்தில் நடித்துவருகிறார். இப்படம் வெளியாகியதும் நண்பேன்டா படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகநாயகன் கமலின் வாரிசு என்ற நாமத்தோடு திரையில் சாதிக்க விரும்பாத ஸ்ருதி, தன்னுடைய திறமையையே பெரிதும் விரும்புகிறார். இசை, நடனம், பாடல், நடிப்பு என பலதுறைகளில் திறமைகளை வெளிப்படுத்தும் ஸ்ருதியின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கிறது என இந்திய திரையுலகம் ஆரூடம் கூறுகிறது. சாதனைகள் தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கனும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 May 2025
20 May 2025