2025 மே 21, புதன்கிழமை

காயப்பட்ட சூர்யா...

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 03 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சூர்யாவின் நடிப்பில் ராம்கோபால் வர்மாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ரத்த சரித்திரம் திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இதன் ஆரம்ப நிகழ்வு மலேசியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்நிகழ்வில் சூர்யாவினால் பங்குபற்ற முடியவில்லை. காரணம் ஏ.ஆர்.முருகதாஸின் '7ஆம் அறிவு' திரைப்பட படப்பிடிப்பின்போது நடிகர் சூர்யாவுக்கு முள்ளந்தண்டின் கீழ்ப்பகுதியில் அடிபட்டிருக்கிறது.

முள்ளந்தண்டில் அடிபட்டதால் வைத்தியர்கள் சிலநாட்கள் சூர்யாவை ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தியிருக்கிறார்கள். ஆகையினால் பூரண ஓய்வில் சூர்யா இருப்பதாக அவர்தரப்பு அறிவித்திருக்கிறது.

இது ஒருபுறமிருக்க, தமிழர் தரப்பின் எதிர்ப்பலை சூர்யாவின் பக்கம் திரும்பி;யிருப்பதால்தான் அவர் மலேசியாவுக்கு செல்லவில்லை என்ற ஒரு கதையும் பரவியிருக்கிறது. சூர்யாவின் வரவுக்கு எதிர்ப்பு காட்டி ஆர்ப்பாட்டம் செய்ய மலேசியாவில் தமிழர் தரப்பினர் தயாராக இருந்ததாகவும் அதனால்தான் சூர்யா அங்கு செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த தகவலை சூர்யா தரப்பு மறுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X