Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2010 டிசெம்பர் 23 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றுவதற்காக டில்லியிலிருந்து வந்த நடிகை ஐஸ்வர்யா ராயின் பயணப்பொதி விமான நிலையத்தில் மாயமானதை அடுத்து குறித்த நிகழ்ச்சியில் அணிவதற்கு ஆடையின்றி தவித்துள்ளார்.
இதனையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவசரம் அவசரமாக ஆடையொன்றைத் தயார் செய்து கொடுத்து ஐஸ்வர்யாவைக் காப்பாற்றியுள்ளனர். அவசர ஆடையாக இருந்தாலும் அதிலும் அசத்தலாக தோன்றி அனைவரையும் அசத்தியுள்ளார் ஐஸ்வர்யா.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றுக்காக டில்லியிலிருந்து வந்துள்ளார் ஐஸ்வர்யா. நிகழ்ச்சிக்காக அணிந்துக் கொள்வதற்கென விசேட உடையுடன் சென்னை வந்து இறங்கிய ஐஸ்வர்யாவின் உடை இருந்த சூட்கேஸைக் காணவில்லை. இதனால் நிகழ்ச்சியில் அணிந்துக்கொள்வதற்கு ஐசுக்கு ஆடை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஐஸ்வர்யாவுக்கு டென்ஷனாகி விட்டது. இருந்தாலும் அதை அடக்கிக் கொண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைத் தொடர்பு கொண்ட ஐஸ்வர்யா, நிலைமையை விளக்கி, தான் தற்பொது அணிந்துள்ள ஆடையுடனேயே நிகழ்ச்சிக்கு வருகை தரவா என்று கேட்டுள்ளார்.
இதைக் கேட்ட ஏற்பாட்டாளர்கள் அவரைப் பொறுமையாக இருக்கக் கூறி அவசரம் அவசரமாக ஒரு புதிய வடிவமைப்பிலான ஆடையொன்றையும் அதற்கேற்ற காலணியையும் தயாரித்து ஐஸ்வர்யாவிடம் வழங்கி நிலைமையை சமாளித்துள்ளனர்.
நிலவை எத்தனை மேகம் வந்து மறைத்தாலும், நிலவின் பொலிவு அப்படியேதான் இருக்கும் என்பதைப் போல அவசரம் அவசரமாக கிடைத்த ஆடையை அணிந்துகொண்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அட்டகாசமான அழகுடன் காட்சி அளித்துள்ளார் ஐஸ்வர்யா.
love crazy Saturday, 25 December 2010 08:00 PM
சுகமான ராகம் கத்ரிக்க வேண்டியது தான்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
20 May 2025