Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
A.P.Mathan / 2011 ஜனவரி 03 , மு.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
'அங்காடி தெரு' படத்தில் தன்னுடைய அபார நடிப்புத் திறனின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை அஞ்சலி. ஏற்கனவே 'கற்றது தமிழ்' படத்தில் இவர் அறிமுகமாகியிருந்தாலும் 'அங்காடி தெரு' படத்தின் மூலமாகத்தான் அநேகரது மனதில் குடிகொண்ட நடிகையாக பரிணாமம் பெற்றார்.
அங்காடி தெருவின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு அஞ்சலியை தேடி வந்தது. ஆர்வக்கோளாறில் பல சிறிய படங்களில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டிருந்தார். இதனால் புது முகங்களுடன் ஜோடி சேர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால் 'அங்காடி தெரு' புகழை தக்கவைப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்ததாக நடிகை அஞ்சலி குறிப்பிடுகின்றார்.
இப்பொழுது 'மகாராஜா' என்னும் படத்தில் கவர்ச்சி கலந்த பாத்திரத்தில் நடித்துவருகிறார் நடிகை அஞ்சலி. ஏற்கனவே ஒப்புக்கொண்ட சிறிய படங்களை ஒருவாறு முடித்துக் கொடுத்துவிட்டாராம். இனிமேல் நல்ல படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பதற்கு முடிவுசெய்திருக்கும் அஞ்சலி, நடிப்புத்துறையில் புது அவதாரம் எடுப்பேன் என்றும் சபதம் விட்டிருக்கிறார்.
புதுவருடத்தில் புது அவதாரம் எடுக்கவுள்ள அஞ்சலி எவ்வளவுதூரம் திரையுலகில் தாக்குப்பிடிப்பார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்...
dhil Wednesday, 05 January 2011 05:04 PM
இப்படி எத்துண பேர் கிளம்ப்பிடீங்க
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
20 May 2025