Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
A.P.Mathan / 2011 ஜனவரி 17 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்சமயம் முன்னணி நடிகர் யார் என்று கேட்டால் முந்திக்கொண்டு சொல்லும் பெயர்களின் ஒன்றாக இருப்பவர் நடிகர் சூர்யா. இளையவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் தனது நடிப்பினால் கவர்ந்திழுத்திருப்பவர் சூர்யா.
நடிகர் சூர்யாவின் நடிப்பு பற்றி இப்பொழுது அனைவரும் சிந்திக்க தொடங்கிவிட்டார்கள். அனைத்து முன்னணி நடிகர்களும் அவரது நடிப்பை பாராட்ட தவறுவதில்லை. நடிப்புக்காக தன் உடலை வருத்துகின்ற நடிகர் என்று பெயரெடுத்தவர் உலகநாயகன் கமல்ஹாசன். அவரது வாயாலேயே சூர்யா பலமுறை பாராட்டப்பட்டிருக்கிறார் என்பது சூர்யாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி எனலாம்.
தற்சமயம் 7ஆம் அறிவு படப்பிடிப்பில் முழுமூச்சாக இருக்கும் சூர்யாவின் அடுத்த படம் தொடர்பான முதல்கட்ட அறிவிப்பு தற்சமயம் வெளிவந்திருக்கிறது. 2009ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படத்தை சூர்யாவுடன் சேர்ந்து வழங்கிய கே.வி.ஆனந்தனின் அடுத்த படத்திலேயே சூர்யா நடிக்கவுள்ளார். 'மாற்றான்' என்று அப்படத்திற்கு பெயர் சூட்டியிருக்கிறார்கள். இப்படத்தின் இசையினை ஹரிஸ் ஜெயராஜ் பார்த்துக்கொள்கிறார்.
இயக்குநர் கே.வி.ஆனந்த் தற்சமயம் 'கோ' படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். அதேபோர் சூர்யாவும் '7ஆம் அறிவு' படத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார். அதனை முடித்துக் கொண்டதும் 'மாற்றான்' படப்பிடிப்பு ஆரம்பிக்கவிருப்பதாக இப்படத்தின் தயாரிப்பாளராக கல்பாத்தி எஸ்.அகோரம் தெரிவித்துள்ளார்.
அநேகமாக பெப்ரவரி மாதத்தில் 'மாற்றான்' படத்தின் ஏனைய நடிகர்கள் பற்றிய விபரம் வெளிவருவதோடு படப்பிடிப்புகளும் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2012ஆம் ஆண்டில் 'மாற்றான்' திரைக்கு வருவான் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கே.வி.ஆனந்துடன் சேர்ந்து பணியாற்றவுள்ளதில் மிகவும் குஷியாக இருக்கிறாராம் நடிகர் சூர்யா.
shanmugam Wednesday, 25 January 2012 04:40 PM
சூப்பர் சூர்யா சார்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
20 May 2025