A.P.Mathan / 2011 பெப்ரவரி 07 , மு.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் அடுத்து உருவாகவிருக்கும் படம் 'மாற்றான்'. இப்படத்தில் சூர்யா நடிக்கின்றார் என்பது பழைய செய்தி. இருந்தபோதிலும் அப்படத்தின் ரகசியங்கள் பல இப்பொழுதே கசியத் தொடங்கிவிட்டன.
இயக்குநர் கே.வி.ஆனந்த் தற்சமயம் ஜீவா நடிக்கின்ற 'கோ' படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். அதனை முடித்துக்கொண்டுதான் சூர்யாவின் நடிப்பில் உருவாகவுள்ள 'மாற்றான்' படத்தினை இயக்கவுள்ளார். அதற்குள்ளாகவே மாற்றான் பற்றி பல வதந்திகள் பரவத் தொடங்கியுள்ளதால் கடுப்பாகியிருக்கிறார் கே.வி.ஆனந்த். இதுவரை எந்த உலக சினிமாவிலும் இல்லாதமாதிரியான பாத்திரத்தில் சூர்யா நடிக்கவுள்ளான் என்றும் இரு தலை ஒட்டிப்பிறந்த உருவமாக சூர்யாவின் பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் ஆளாளுக்கு வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.
இந்த செய்திகளை படித்து கடுப்பாகிய இயக்குநர் முதன்முதலாக வாயை திறந்திருக்கிறார். 'நான் தற்சமயம் 'கோ' படத்தின் வேலைகளில் ரொம்ப பிஸியாக இருக்கிறேன். அதனை முடித்த பின்னர்தான் 'மாற்றான்' பற்றி சிந்திப்பேன். அதற்கு எப்படியும் 3 மாதங்களாகிவிடும். சூர்யா இந்தப் படத்தில் வித்தியாசமான கரெக்டர்களில் நடிக்கிறார் என்பது உண்மைதான். ஆனால் அது எப்படிப்பட்ட பாத்திரங்கள் என்பதை இப்பொழுதே சொல்ல விரும்பவில்லை. ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். மாற்றானில் சூர்யா 5 வித்தியாசமாக கெட்டப்களில் வருவார்..' என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.
மாற்றான் படப்பிடிப்புகள் 3 மாதங்களில் ஆரம்பிக்கவுள்ளன. இப்படத்திற்கான வசனம் சுபா. இசை ஹரிஸ் ஜெயராஜ். இப்படத்தினை கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கிறார்.
.jpg)
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .