Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 மார்ச் 04 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஜினி – கமல் - பாலச்சந்தர் என்ற கூட்டணி என்றாலே மெகா ஹிட்ஸ் தான். இருப்பினும் இந்த மூன்று இமயங்களும் இணைந்து சுமார் 30 வருடங்களுக்கும் மேலாகின்றன. ரஜினி – கமல் இணைந்து நடிப்பார்களா? என்ற கேள்வி இத்தனை வருடங்களாக ரசிகர்கள் மத்தியில் சலிக்காமல் இருந்துகொண்டிருக்கின்ற நிலையில் அவர்களை மீண்டும் சினிமாவில் இணைய வைக்கவுள்ளார் அவர்களின் குருவான கே.பாலச்சந்தர்.
நீங்களும் கமலும் இணைந்து நடிக்க மாட்டீர்களா? என்ற கேள்விக்கு பதிலே சொல்லாத ரஜினி. ரஜினியுடன் இணைய மாட்டீர்களா? என்றால் சரியான பதிலே தராத கமல் என்று இருவரும் ரசிகர்களை சமாலித்தே காலத்தை கடத்தி வந்த நிலையில் அந்த கேள்விக்கு பதிலேற்படுத்திக் கொடுத்துள்ளார் பாலச்சந்தர். ஆனால் முழு சினிமாவில் அல்ல... ஒரு குறும்படத்தில்.
பையனூரில் சினிமாக்காரர்களுக்காக அரசு ஒதுக்கியுள்ள இடத்தில் கட்டப்படும் ஸ்டூடியோ மற்றும் இதர அரங்குகளின் அடிக்கல் நாட்டுவிழாவின்போது இந்த குறும்படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவுள்ளது. ரஜினியும் கமலும் அந்த விழாவிலேயே இந்தப் படத்தை நடித்துக் கொடுக்கப் போகிறார்களாம்.
jaliyath Saturday, 05 March 2011 12:56 AM
அட இதெல்லாம் வெறும் பாசாங்கு .மக்களை வைத்து இவர்கள் சம்பாதிக்கிறார்கள். ஏமாறாதீர்கள்.
Reply : 0 0
k.vijayakumar Tuesday, 12 April 2011 01:50 AM
இலங்கை
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
20 May 2025