2025 மே 21, புதன்கிழமை

அசினுக்கு 'ஷாக்' கொடுத்த த்ரிஷா...

Menaka Mookandi   / 2011 மார்ச் 17 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திரையுலகில் ஒருவருக்கு கிடைக்கும் வாய்ப்பு மற்றொருவர் தட்டிப் பறிப்பதும் பறிபோவதென்பதும் சகஜமாகிவிட்ட விடயம். அந்தவகையில் அண்மைக்காலமாக த்ரிஷாவுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை அசினும் அசினுக்கு கிடைக்கும் வாய்ப்புக்களை த்ரிஷாவும் தட்டிப்பறிக்கும் நிலைமை தலையெடுத்திருந்தது.

திரையுலகில் மாத்திரமே இருந்த இந்த போட்டியினால் ஒருவருக்கொருவர் சலித்துப் போகாமல் கிடைக்கும் வாய்ப்புக்களை சிறந்தமுறையில் பயன்படுத்தி வந்தார்கள்.

ஆனால் இம்முறை த்ரிஷாவால் ஷாக்காகியிருக்கிறார் அசின். இலட்சம் இலட்சமாகக் கொட்டும் அழகுசாதனப் பொருள் விளம்பர வாய்ப்பொன்றை த்ரிஷா தட்டிப்பறித்துக்கொண்டதால்தானாம் அசினுக்கு இந்த ஷாக்.

பிரபலமான அழகு சாதனப்பொருள் விளம்பரமொன்றில் நீண்ட நாட்களாக அசின் நடித்து வந்தார். இதற்காக அவர் பெரும் தொகையை சம்பளமாக வாங்கியும் வந்தார்.

தற்போது அந்த வாய்ப்பை த்ரிஷா தட்டி பறித்துள்ளார். கடந்த வாரம் இதற்கான படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்போது அந்த அழகுசாதனப் பொருளுக்குப் பக்கத்தில் த்ரிஷா சிரிப்பது போல விளம்பரங்களும் வெளியாகிவிட்டன. அசினுக்கு இது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இலங்கையில் படப்பிடிப்பு நடந்ததை அடுத்து தொடர்ந்து பல வாய்ப்புகளை இழந்து வருகிறார் அசின். அதில் முக்கியமானது ரஜினிக்கு ஜோடியாக ராணாவில் நடிக்க வந்த வாய்ப்பு. கே.எஸ்.ரவிக்குமார், அசினை ஒப்பந்தம் செய்ய பரிந்துரைத்தும், ரஜினி வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

இப்போது முக்கிய விளம்பர வாய்ப்பும் பறிபோயுள்ளது. ஆனால் இதற்குக் காரணம் அசினின் இலங்கைப் பயணமா அல்லது வேறெதுவுமா என்பது குறித்து இதுவரையில் தகவல்கள் வெளியாகவில்லை. என்னதான் காரணமாக இருந்தாலும் அசினுக்கு இது பேரிழப்புதான்.


You May Also Like

  Comments - 0

  • nawas mohammed Friday, 18 March 2011 06:57 AM

    நரகத்து கொள்ளிக்கட்டைகள் இவங்கதான்

    Reply : 0       0

    mohamed plus Saturday, 19 March 2011 10:32 PM

    சரியாக சொன்னீங்க தலைவா...

    Reply : 0       0

    asker Sunday, 20 March 2011 03:33 PM

    பணம் என்ன்றால் பத்தும் பறக்கும்

    Reply : 0       0

    ......... Friday, 25 March 2011 09:53 PM

    டான்'த வொர்ரி பி ஹாப்பி அசின்

    உங்களுக்கு நல்ல வைப்பு வரும்

    ஆல் ஸ்ரீலங்கன் வித் யு

    Reply : 0       0

    ansar Wednesday, 30 March 2011 04:52 PM

    இதெல்லாம் ஒரு பொழப்பா.

    Reply : 0       0

    Mohammed Wednesday, 27 April 2011 04:42 PM

    கவலை வேண்டாம் அசின். உங்களை நீங்கள் தானே சினிமாவில் நம்பர் வண்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X