Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
A.P.Mathan / 2011 மே 02 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
குழந்தைத் தனமான நடிப்பில் விக்ரம் அசத்தியிருக்கும் 'தெய்வ திருமகன்' படத்தினுடைய பெயரை மாற்றுவதற்கு தீர்மானித்திருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
'தெய்வ திருமகன்' படப்பிடிப்புகள் நிறைவுபெற்று படம் திரைக்குவரும் தறுவாயில் இருக்கின்ற சந்தர்ப்பத்தில் தேவர் சமூகம் போர்க்கொடி தூக்கியிருந்தது. பசும்பொன் முத்துராமலிங்க தேரர் என்பவரை தெய்வ திருமகன் என்றுதான் அழைப்பார்களாம். அவருடைய பெயரை அவமதிக்கும் விதத்தில் விக்ரமின் படத்திற்கு 'தெய்வ திருமகன்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்று கூறி நடிகர் விக்ரமின் வீட்டிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் சிலர். அவர்களை பொலிஸார் கைதுசெய்துமிருந்தனர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட படத்தின் தயாரிப்பாளர் குறித்த படத்தின் பெயரை மாற்றுவதாக அறிவித்துள்ளார். 'விக்ரமனின் தெய்வ திருமகள்' என்று புதிய பெயர் சூட்டியுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
அனைவரது எதிர்பார்ப்பினையும் தன்வசப்படுத்தியிருக்கும் விக்ரமின் புதிய படத்திற்கு இப்படியொரு குழப்பம் வந்ததில் ரசிகர்கள் குழம்பிப்போயுள்ளார்கள். இருப்பினும் திட்டமிட்டபடி படம் திரைக்கு வருமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
mujahid Tuesday, 03 May 2011 08:41 PM
விக்ரம் ந ஒன்....
Reply : 0 0
satheer ahamed Wednesday, 18 May 2011 04:40 PM
நான் intha படத்திற்கு தெய்வதிருமகன் எனும் பெயரே பொருத்தம் என ninaikiren
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
20 May 2025