Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 மே 12 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராமாயணக் கதையினை மையமாக வைத்து தெலுங்கில் தயாராகிக்கொண்டிருக்கும் புதிய திரைப்படம் 'ராம ராஜ்ஜியம்'. இதில் சீதை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருப்பவர் நயன்தாரா. இந்நிலையில், இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்புக்கள் தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் இடம்பெற்று வருகின்றன.
இராமர் கதாபாத்திரத்தில் பாலகிருஷ்ணாவும், வால்மீகி முனிவர் வேடத்தில் அக்கினேனி நாகேஸ்வரராகவும், இலட்சுமணன் வேடத்தில் ஸ்ரீகாந்தும் நடித்துவரும் இந்த திரைப்படமானது புராணக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்படுவதால் அதில் நயன்தாரா நடிப்பதற்கு பிரபுதேவா விருப்பம் தெரிவித்துள்ளாராம்.
இந்நிலையில், பிரபுதேவா தனது மனைவி ரம்லத்தை பிரியக் காரணமாக இருந்த நயன்தாரா, சீதை கதாபாத்திரத்தில் நடிப்பதா? ஏன் இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இது தொடர்பில் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
'தெலுங்கில் தயாராகும் 'ராம ராஜ்ஜியம்' படத்தில் நயன்தாரா சீதை வேடத்தில் நடிப்பது இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது. பிரபுதேவா திருமணமானவர். மனைவி ரம்லத் மற்றும் குழந்தைகளுடன் வசிப்பவர். அவர் வாழ்க்கையில் புகுந்து ரம்லத்துக்கு துரோகம் செய்தவர் நயன்தாரா.
எனவே சீதை வேடத்தில் நடிக்க நயன்தாராவுக்கு தகுதி இல்லை. அவரை இந்தப் படத்தில் இருந்து நீக்கவேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்தில் ராம ராஜ்ஜியம் படத்தை திரையிடவிடாமல் தடுப்போம். ஆந்திர மக்களும் இதை புறக்கணிக்க வேண்டும்' என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
raj fernando Saturday, 14 May 2011 11:22 PM
பூம்புகார் படம் எடுப்பதயிருந்தால் மாதவி பாத்திரத்தில் நயன் ஜொலிப்பார்,
Reply : 0 0
M.A.A.Rasheed Saturday, 21 May 2011 01:20 AM
மாதவி வேடமும் நயன் தாராவுக்கு லாயக்கில்லை. வேண்டுமானால் குடும்பத்தை கெடுக்கும் வில்லி வேடத்தில் நடிக்கலாம்.
Reply : 0 0
batty Monday, 23 May 2011 08:58 AM
nayan thara who? what kind of woman? seetha caractor suitable for like this .....? just think .. this not like other movie this is one of
religion related to this.for this kind of heroin choosing for seetha caractor no one
feel this is insulting of seetha. where is gone hindu religion leader mind. be like muslim people they are never compire allah or prohpet.i think islam say about true life.before blame them lets find out whats in there. be honest.
Reply : 0 0
NM.Ramzath Tuesday, 24 May 2011 02:59 PM
இவள் நடிப்பதன் காரணமாக சீதைக்கு எந்தவிதமான மானக்கேடும் இடம்பெறமாட்டாது. இருந்தாலும் நடிகை எனும் போது எந்தவிதமான வேடத்திலும் நடிக்கணும் அவள்தான் நடிகை. ஆகவே இந்த கதப்பாத்திரத்திற்கு புது நடிகையை அறிமுகப் படுத்தவும்.
Reply : 0 0
akkarai Saturday, 28 May 2011 08:53 PM
ஐயோ ஐயோ என்னய்யா இங்க நடக்குது,,, அப்ப ஹீரோ மட்டும் ராமர் மாதிரி வாழ்ந்து இருப்பாரோ? இவங்க கூத்தாடி கூட்டம் அய்யா. இது கதை அதில் அவங்க நடிக்கிறாங்க.
என்ன நடிக்கிறாங்க அவ்வளவுதான். இதற்கு போய் சீதை தேடினால்,,,, எந்த நடிகையும் லாயக்கில்லை, புரிஞ்சுகோங்கப்பா.....
Reply : 0 0
Ratnam Sunday, 29 May 2011 06:26 PM
சீதை போன்ற பெண்தான் சீதையாக நடிக்கவேண்டும் என்பது முட்டாள் தனமாய் தெரியவில்லையா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
20 May 2025