Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 மே 15 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியலில் ஈடுபடுவதற்கான திட்டம் எதுவும் தற்போது இல்லை. இருப்பினும் எதிர்க்காலத்தில் முழு நேர அரசியலில் ஈடுபடுவது நடக்கக்கூடும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டது. இந்நிலையில் தேர்தல் வெற்றி தொடர்பில் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று நான் உறுதியாக நம்பினேன். ஆனால் இந்த அளவு மகத்தான வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சரானதில் மகிழ்ச்சியடைகிறேன்.
சமூகத்தின் பலதரப்பு மக்களும் மாற்றத்தை விரும்பினர். நாட்டுக்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டது. மக்களின் வாக்களிப்பு அதனை எடுத்துக்காட்டியுள்ளது. நான் மட்டுமின்றி மாநில மக்கள் அனைவருமே ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வர உறுதுணையாக இருந்தார்கள்.
தேர்தலில் எங்களின் மக்கள் இயக்கமும் ரசிகர்களும் கடுமையாக உழைத்தார்கள். நான் வேண்டுகோள் விடுத்ததற்காக இரவு - பகலாக பணியாற்றினார்கள். அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.
சில காலத்துக்குப் பிறது முழுநேர அரசியலில் ஈடுபட வாய்ப்புண்டு. ஆனால் தற்போது அதற்கான திட்டம் இல்லை. ஜெயலலிதாவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார் விஜய்.
SK Monday, 16 May 2011 02:44 PM
No i dont want Vijay to go to politics :sad:(((
Reply : 0 0
jaliyuath Tuesday, 17 May 2011 12:31 AM
எங்களுக்கு தெரியுமில, புலி பதுங்குவது பாயத்தான் என்று.
Reply : 0 0
M.A.A.Rasheed Saturday, 21 May 2011 01:28 AM
விஜய் அரசியலுக்கு வந்து சினிமா வசனம் பேசுவாரா ? இலங்கையை உலகப் படத்தில் இருந்து எடுக்கவேண்டும் என்று மடத்தனமாக பேசுவாரா ? இலங்கை இந்தியாவுக்கு கீழ் உள்ள நாடா? வார்த்தைகளை அளந்து பேசவேண்டும்.சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறு.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
20 May 2025