2025 மே 21, புதன்கிழமை

சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி...

Menaka Mookandi   / 2011 மே 16 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சுகயீனம் காரணமாக கடந்த சில வாரங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த், மேலதிக சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு பயணமாகவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 29ஆம் திகதி சென்னையில் நடைபெற்ற ராணா திரைப்படத்துக்கான படப்பிடிப்பின்போது திடீரென நோய்வாய்ப்பட்ட ரஜினி, மயிலாப்பூரில் உள்ள இசபெல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஒரு வாரகாலமாக சிகிச்சைப் பெற்று வீடு திரும்பிய அவர் ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில், மீண்டும் அவர் நோய்வாய்ப்பட்டதை அடுத்து கடந்த 4ஆம் திகதி சிகிச்சைக்காக இசபெல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரகாலம் சிகிச்சை பெற்றார். மீண்டும் வீடு திரும்பிய அவர் கடந்த 13ஆம் திகதி சுகவீனம் காரணமாக போரூர் இராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

அங்கு அவருக்கு சிகிச்சையளித்த வைத்தியர்கள், பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டதை அடுத்து ரஜினிகாந்த், இரைப்பை மற்றும் நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கண்டறிந்தனர். 'ரஜினியின் உடல்நிலை பாதிப்புக்கு புகைப்பழக்கம் ஒரு காரணம். இதனால்தான் அவரது உடல்நிலை இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது.

இரைப்பை தொடர்பான கோளாறுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம். சிறுநீரக பிரச்சினைக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரஜினிக்கு நிமோனியா காய்ச்சலும், சளியும் உள்ளது. அதற்கு தொடர்ந்து மருந்துகள் வழங்கி வருகிறோம்.

புகைப்பழக்கம் காரணமாக அவரது நுரையீரலிலும் அழற்சி ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவருக்கு இலேசான மூச்சுத்திணறல் உள்ளது. அவருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்கி வருகிறோம். அத்துடன் ரஜினிக்கு இதயத்தில் சிறு பிரச்சினை உள்ளது. இதைத் தீர்ப்பதற்காக 'பேஸ்மேக்கர்' கருவி பொருத்துவது அவசியம். தொடர்ந்து வழங்கப்படும் சிகிச்சைகளினால் விரைவில் அவர் குணமாகிவிடுவார்' என்றார்.

இந்நிலையில், ரஜினியின் உடல்நிலை குறித்து கருத்து தெரிவித்துள்ள அவரது உறவினர் ஒருவர், 'ரஜினிக்கு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை  வழங்கும் போது அவரைப் பார்ப்பதற்காக ஏராளமானோர் வருகிறார்கள். இதை தவிர்ப்பதற்காக ரஜினியை அமெரிக்கா அழைத்துச் சென்று அங்கு அவருக்கு சிகிச்சை வழங்க தீர்மானித்துள்ளோம்' என்று கூறியுள்ளார்.

ரஜினியின் உடல்நிலை பற்றி கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தவறான வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன. இதனால் கவலை அடைந்த ரசிகர்கள் பலர் அவரை பார்ப்பதற்காக போரூர் இராமச்சந்திரா மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அவர்களை மருத்துவமனை ஊழியர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டனர்.

இந்நிலையில் அங்கு வந்த ரஜினியின் மருமகனும் நடிகருமான தனுஷ், 'ரஜினி நலமுடன் உள்ளார் என்றும் அவருக்காக ரசிகர்கள் அமைதியாக பிரார்த்தனை செய்ய வேண்டும்' என்றும் ரசிகர்கள் மற்றும் ஊடகங்களிடம் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0

  • Mohd Rizvi Maruthamunai Qatar Tuesday, 17 May 2011 06:27 PM

    அஆஹா சும்மா அதிருதில்ல

    Reply : 0       0

    fahmy Wednesday, 18 May 2011 03:43 AM

    ரஜனி நிஜமாகவே நல்ல மனிதர் .அவர் குணமடைய பிரார்த்திப்போம் .ரஜனி மனதில் ஒரு கேள்வி அதற்கான விடை தேடி அலைகின்றார் .அவர் இஸ்லாத்தை படிக்க வேண்டும் அங்கு இருக்கு பதில்.

    Reply : 0       0

    Alawudeen Saturday, 21 May 2011 10:43 PM

    ரஜனிகாந்த் ஒரு சிறந்த நடிகர். அவருக்கு உலகம் பூராவும் ரசிகர்கள் நிறைந்து உள்ளார்கள். அவர் சீக்கிரம் குணமடைய வேண்டும். அவரின் அடுத்த படப்பிடிப்பு ரானாவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
    நானும் ரஜனிகாந்தின் பரம ரசிகன்தான். என்றாலும்.. இண்த வயதில் hero வேசம் கொஞ்சம் over தான்...

    Reply : 0       0

    niyas Monday, 23 May 2011 08:58 PM

    நல்ல மனிதர் நல்ல நடிகர். எப்போதும் ஒரு தேடலில் உள்ளவர். அவரது தேடலுக்கு இன்னும் விடை காணாது தவிக்கிறார். குர்ரானை படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பயன் கிடைக்கும். அதற்கான சந்தர்ப்பம் அவருக்குக் கிடைக்குமா? யாரவது அந்த முயற்சியில் இறங்குவார்களா?

    Reply : 0       0

    thilaka Tuesday, 24 May 2011 06:38 AM

    ரஜனி நல்ல மனிதர் கூடிய தினங்களில் சுகமாக வேண்டும் என கடவுளிடம் கேட்கிறேன். இலங்கை

    Reply : 0       0

    dd Wednesday, 25 May 2011 07:20 PM

    rajini kunamadaya naan piraarththikirean. avar seekkiram kunamadaivaar. avar oru nalla manithan. 100 years thaandiyum vaalvaar avar.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X