Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூன் 07 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெரு நாய்களைத் தத்தெடுத்து வளர்க்குமாறு பொதுமக்களை வலியுறுத்தும் விளம்பரமொன்று நாளை வெளியிடப்படவுள்ளது. இதில் நடிகை த்ரிஷா நடித்துள்ளார். தெரு நாய்கள் மீது அவர் கொண்டுள்ள இரக்கத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த விளம்பரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஹைதராபாத்தில் படப்பிடிப்புக்காகச் சென்றுகொண்டிருந்த த்ரிஷா, வீதியோரம் அடிபட்டு கிடந்த நாய்க்குட்டியொன்றை எடுத்துச் சென்று வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சையளித்தார். அத்துடன், படப்பிடிப்பை முடித்துக்கொண்டு மீண்டும் சென்னை திரும்பிய அவர் அந்த நாய் குட்டியை தன்னோடு அழைத்துச் சென்று வீட்டில் வைத்து பராமரித்து வருகிறார்.
இந்த சம்பவத்தை அடுத்து வீதியோரங்களில் இருக்கும் நாய்களை தத்தெடுத்து வளர்க்குமாறு அனைவருக்கும் ஆலோசனை வழங்கி வந்துள்ளார் த்ரிஷா. அவரது இந்த அக்கறையைப் பார்த்த பிராணிகள் நல அமைப்பு த்ரிஷாவை இந்திய அளவிலான விளம்பர தூதுவராக நியமித்துள்ளது.
இது குறித்து த்ரிஷா கூறுகையில், 'நிறைய வீடுகளில் நாய்கள் வளர்க்கின்றனர். பெரும்பாலானோர் நாய்களை காசு கொடுத்து வாங்கி வளர்க்கிறார்கள். அப்படி செய்யக்கூடாது. தெரு நாய்களும் நல்ல நாய்கள்தான். அவற்றை தத்து எடுத்து வளர்க்க வேண்டும். நிறைய இடங்களில் தெரு நாய்கள் ஆதரவின்றி சுற்றித் திரிக்கின்றன. அவற்றை ஒவ்வொருவரும் வீட்டுக்கு எடுத்து போய் வளர்க்க வேண்டும்' என்றார்.
hamar Wednesday, 08 June 2011 04:12 PM
neenkal nayai kuda vida maatinkala?
Reply : 0 0
hamar Wednesday, 08 June 2011 04:13 PM
athukuthan ippo naveenama என்னோ மோ எல்லாம் வந்து இருக்கு அதை பாவிக்கலாம்.
Reply : 0 0
ruthrar Thursday, 09 June 2011 01:23 AM
எப்போதும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கும் உங்கள் ஈனப் புத்திகள் உங்களை விட்டு போகாது என்பது உங்கள் கருத்து வெளிப்படுத்தியுள்ளது. உங்களைப் போன்றவர்களால் ஒட்டு மொத்த ஆண்கள் இனத்திற்கே கேவலம்...
Reply : 0 0
Hot water Thursday, 09 June 2011 01:29 AM
எல்லோரும் எதைப்பற்றி பேசுறாங்க. எனக்குன்னா புரியல்ல.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
20 May 2025