Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூன் 10 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் அஜித்தின் ரசிகர்களுக்கும் விஜயின் ரசிகர்களுக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் இடம்பெற்று வருவது சகஜமே. ஆனால் தலயும் தளபதியும் நீண்ட நாட்களுக்குப் பின்னர் மோதிக்கொள்ளப் போகிறார்கள் என்றால் அது அனைவர் மத்தியிலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் செய்தியாகும். ஆம், நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் மற்றும் விஜயின் திரைப்படங்கள் மோதிக்கொள்ளப் போகின்றன.
எம்.ராஜா இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் வேலாயுதம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. படம் வெளியிடப்படுவதற்கு தயாராக இருந்தாலும் நல்ல விளம்பரம், மார்க்கெட் உத்திகளைச் செய்த பிறகு வெளியிடத் திட்டம் தீட்டியுள்ளார் தயாரிப்பாளர். எனவே எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வேலாயுதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இன்னொரு பக்கம் அஜீத்தின் மங்காத்தாவும் ரெடியாகிவிட்டது. இந்தப் படமும் ஓகஸ்ட் மாதம் தான் வெளியிடப்படவுள்ளது. தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் மூவீஸ் தயாரிப்பிலும் வெங்கட் பிரபுவின் இயக்கத்திலும் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் அர்ஜுன், த்ரிஷா, லட்சுமி ராய் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. அதனால் ரசிகர்கள் மத்தியில் பாரியதொரு எதிர்ப்பார்ப்பினை அஜித்தின் மங்காத்தா உருவாக்கியிருக்கிறது.
ஆனால் இந்த இரண்டு படங்களையும் ஒரே நாளில் வெளியிடாமல் இரண்டு வார இடைவெளி கொடுத்து வெளியிடப்போகிறாக்களாம். ரசிகர்கள் அனாவசியமாக மோதிக் கொள்வதைத் தவிர்க்கவும், நல்ல வரவேற்பை ஏற்படுத்தவுமே இந்த ஏற்பாடாம். பொறுத்திருந்து தான் பார்ப்போமே. இந்த மோதலில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்று.
jasminala Friday, 17 June 2011 10:25 PM
முட்டாள் ரசிகர்கள் இருக்கும் வரை நடிகர்களுக்கு கொண்டாட்டம் தான். இதை இந்த முட்டாள்கள் தான் உணரவேண்டும்
Reply : 0 0
inchaf Tuesday, 21 June 2011 03:49 PM
இது வெறுமனே பொழுதுபோக்கு......................
Reply : 0 0
munas sainthamaruthu Monday, 27 June 2011 06:04 PM
நடிப்பை ரசிப்பது ரசிகர்கள், நடிப்பை ரணகளப்படுத்துவது தயாரிப்பாளர்கள்தான்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago