Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூன் 29 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது திரையுலக வாழ்வின் கடைசி தருணத்தை நேற்று சந்தித்த நடிகை நயன்தாரா, கதறி அழுதபடி திரையுலகை விட்டு விடைபெற்றுச் சென்றுள்ளார். தெலுங்கில் அவர் நடித்த ஸ்ரீ ராம ராஜ்யம் என்ற படமே அவர் நடிக்கும் கடைசிப் படம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் படப்பிடிப்புக்கள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளன. இந்நிலையிலேயே திரையுலகை விட்டு கண்ணீருடன் விடைபெற்றுள்ளார் நயன்.
விஜய் கதாநாயகனாக நடித்த வில்லு படத்தின் கதாநாயகியாக நடித்தபோது நடிகை நயன்தாராவுக்கும், நடிகரும் இயக்குனருமான பிரபுதேவாவுக்கும் இடையில் காதல் ஏற்பட்டது. இருவரும் மிகவும் நெருக்கமாகப் பழகினார்கள் என்று செய்திகள் வெளியாகியிருந்தன. நயன்தாரா திருமணமாகாதவர். பிரபுதேவாவுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இவர்கள் காதலுக்கு ஆரம்பத்தில், பிரபுதேவாவின் மனைவி ரம்லத் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதையும் மீறி நயன்தாரா -பிரபுதேவா காதல் தொடர்ந்தது.
நயன்தாராவின் காதலுக்கு விலையாக ரம்லத்தை விவாகரத்து செய்யத் தயாரானார் பிரபுதேவா. விவாகரத்து கோரி நீதிமன்றில் மனுவொன்றையும் தாக்கல் செய்தார். பிரபுதேவாவும் ரம்லத்தும் திடீர் திருப்பமாக, இருவரும் மனமொத்து பிரிவதாக எழுதிக் கொடுத்தனர். இதற்கு நஷ்டஈடாக ரம்லத்துக்கு பல கோடி சொத்துக்களை கொடுத்துள்ளார் பிரபுதேவா. இந்த ஒப்பந்தம் அண்மையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் அடுத்தமாதம் இந்த வழக்குக்கான தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
விவாகரத்து தீர்ப்பு கிடைத்ததும் பிரபுதேவா, நயன்தாராவை திருமணம் செய்துகொள்கிறார். இப்போது இருவரும் மும்பையில் தங்கியிருக்கிறார்கள். பெரும்பாலும் திருமணத்தையும் விரைவில் மும்பையிலேயே வைத்துக்கொள்வார்கள் என்று தெரிகிறது. இந்நிலையில், திருமணத்துக்குப்பின் நயன்தாரா சினிமாவில் நடிக்கக்கூடாது என்று பிரபுதேவா கண்டிப்புடன் கூறியிருக்கிறார். அதற்கு நயன்தாராவும் சம்மதம் தெரிவித்து இருக்கிறார். அவர் கடைசியாக, 'ஸ்ரீ ராம ராஜ்யம்' என்ற தெலுங்கு படத்தில் சீதையாக நடித்து வந்தார்.
இது, என்.டி.ராமராவ் நடித்த 'லவகுசா' என்ற படத்தின் ரீமேக் ஆகும். அவருடைய மகன் பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது. அதில் நயன்தாரா கலந்துகொண்டு நடித்து வந்தார். இந்நிலையில் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது.
நயன்தாரா காலையில் படப்பிடிப்புக்கு வந்தபோதே சோகமாக காணப்பட்டடுள்ளார். மாலை 6 மணிக்கு படப்பிடிப்பு முடிந்ததும், அவர் மற்ற நடிகர் - நடிகைகளிடமும், படப்பிடிப்பு குழுவினரிடமும் பிரியாவிடை பெற்றுள்ளார். அப்போது அவர் கதறி அழுததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வளவு நாட்களாக தான் நிலைத்திருந்த சினிமாவை விட்டு பிரிந்து போகிறோமே என்ற துயரம் தாங்காமல், சத்தம்போட்டு அழுததாகவும் அச்செய்திகள் குறிப்பிடுகின்றன.
இந்நிலையில் நயனுக்கு ஆறுதல் கூறியுள்ள பாலகிருஷ்ணா, 'திருமணமானபிறகும் நீ தொடர்ந்து நடிக்கலாம். கவலைப்படாதே' என்று கூறியுள்ளார். இருப்பினும் 'திருமணத்துக்குப் பின் நடிக்கக்கூடாது என்று அவர் கண்டிப்பாக கூறிவிட்டார்' என்று பதில் அளித்துள்ளார் நயன்தாரா.
அதன் பின்னர் படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்த சுமார் 150 பேருக்கு கடிகாரங்களை பரிசாக வழங்கியுள்ள நயன், தன்னிடம் நீண்ட நாட்கள் 'மேக்கப்மேன்' ஆக பணிபுரிந்த ராஜுவுக்கு ஒரு பவுனில் தங்க மோதிரத்தையும் பரிசளித்துள்ளார். அதன்பின், படப்பிடிப்பு குழுவினர் அனைவருக்கும் தனது சார்பில் விருந்தளித்துள்ள, நயன்தாரா கண்களை துடைத்துக்கொண்டு விமானம் மூலம் மும்பைக்கு பறந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
Mifthar Mohamed Sunday, 03 July 2011 08:30 PM
Life is very short
Reply : 0 0
asker Saturday, 09 July 2011 04:53 PM
பிரபு தேவா வேறு மற்ற ஒரு பெண்ணை மணம் முடிக்கும் போது உங்களுக்கு திரும்ப வரலாம் இ அப்ப தன் கணவனை இழக்கும் போது உள்ள வலி தெரியும்.
Reply : 0 0
haneefa Sunday, 10 July 2011 04:40 PM
ஐ டோன்ட் நோ தமிழ். பட் ஐ லைக் நயன்தாரா ஷி இஸ் பியூட்டிபுள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago