Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூலை 01 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்துவிட்டு நயன்தாராவை திருமணம் செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பிரபுதேவா, மனைவியிடமிருந்து விவாகரத்து பெறுவதில் மீண்டும் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளார். மனைவி ரம்லத்துக்கு தருவதாகக் கூறிய சொத்துக்களை இன்னும் பிரபுதேவா மாற்றிக் கொடுக்காததாலேயே இந்த பிரச்சினை எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களின் விவாகரத்து தொடர்பான வழக்கு நேற்று சென்னை குடும்பநல நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதும் இருவருமே மன்றில் ஆஜராகியிருக்கவில்லை. இதன் பின்னணியில் பரபரப்பான காரணங்கள் சொல்லப்படுகின்றன.
பிரபுதேவாவும், நயன்தாராவும் கடந்த வருட இறுதியில் திருமணத்துக்கு தயாரான நிலையில் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்காக நீதிமன்றத்தின் உதவியை நாடினார் ரம்லத். நயன்தாரா தனது கணவரை பிரிக்க முயற்சிப்பதாகவும் பிரபுதேவாவை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.
பின்னர் பிரபுதேவா- ரம்லத் இடையே சமரசம் ஏற்பட்ட நிலையில் இருவரும் மனம் ஒத்து பிரிவதாக மனுதாக்கல் செய்தனர். இந்நிலையில், கிழக்கு கடற்கரைசாலையில் உள்ள பண்ணை வீடு, அண்ணா நகரில் உள்ள வீடு மற்றும் ஐதராபாத்தில் உள்ள தொடர்மாடி வீடுகள் போன்றவற்றை மனைவி மற்றும் மகன்களுக்கு வழங்குவதாக பிரபுதேவா உறுதி அளித்தார். இதனையடுத்து வழக்கின் தீர்ப்பு ஜூன் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
ஆனால் இன்னும் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் ரம்லத்துக்குப் போய்ச்சேரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், எதிர்வரும் 10ஆம் திகதி இவர்கள் தொடர்பான வழக்கு விசாரணையின்போது ரம்லத் மற்றும் குழந்தைகள் பெயரில் ஏற்கனவே குறிப்பிட்டப்படி சொத்துக்கள் பத்திரப்பதிவு செய்யப்பட்டு விட்டதா? என்ற தகவல் பிரபுதேவா தரப்பில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகே இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
asker Monday, 04 July 2011 10:47 PM
இரண்டாவது மனம் முடிப்பது தப்பு அல்ல ,எந்த மதமும் இதற்கு தடை அல்ல, ஆனால் சரி சமமாக பார்த்துக்கொள்ள வேண்டும். முடியாவிட்டால் ஒன்றே சிறந்தது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago