Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூலை 03 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் சிவகுமாரின் இளைய மகனும் முன்னணி நடிகருமான கார்த்தியின் திருமணம் இன்று ஞாயிற்றுக்கிழமை கோவையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தமிழர் மரபுப்படி திருப்பல்லாண்டு, திருப்புகழ், திருவாசகம் என தமிழ்மறைகள் முழங்க, மணமகள் ரஞ்சனி கழுத்தில் தாலி கட்டினார் கார்த்தி.
நடிகர் சிவகுமாரின் இளைய மகனும் நடிகருமான கார்த்தியிற்கும் ஈரோடு அருகேயுள்ள கிலாம்பாடியைச் சேர்ந்த சின்னசாமி - ஜோதி மீனாட்சியின் மகள் ரஞ்சனிக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்த நிலையில் இன்று திருமண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
மணமகள் கழுத்தில் நடிகர் கார்த்தி தாலி கட்டியதும் திருமணத்திற்கு வந்திருந்த முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள், நடிகைகள், ரசிகர்கள் அட்சதை தூவி தம்பதியினரை வாழ்த்தினார்கள்.
நடிகர்களான பிரபு, ராஜேஷ், பாண்டியராஜன், நிழல்கள் ரவி, சித்தார்த், சரவணன் நடிகைகளான ராதிகா, நக்மா, பூர்ணிமா பாக்கியராஜ் இயக்குநர்களான கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.வி.உதயகுமார், ஹரி, சங்கர் தயாள், மனோபாலா, பாலா, சுசீந்திரன், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ், பாடகி சுசித்ரா, பாரதி வித்யாபவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், கிருஷ்ணா சுவீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணன், டாக்டர். தங்கவேலு, கோவை மணி, திருப்பூர் பாலு ஆகியோர் தமபதியினரை வாழ்த்தினார்கள்.
இதேவேளை திருமணத்துக்கு வந்தவர்களுக்கு தாம்பூலத்துடன் வாகை, செண்பகம், துளசி போன்ற மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
ஜூலை 7ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ள கார்த்தி - ரஞ்சனி தம்பதிகளின் வரவேற்பு வைபவத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவாரென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
nithya Monday, 04 July 2011 06:37 PM
ஹாய் கார்த்தி விஷ் யு ஹாப்பி
Reply : 0 0
asham Tuesday, 05 July 2011 06:34 PM
திருமண வாழ்த்துக்கள் - அசாம்
Reply : 0 0
shifan Thursday, 07 July 2011 10:20 PM
ஹாப்பி திருமண வாழ்த்துகள் கார்த்தி.
Reply : 0 0
jameel Saturday, 09 July 2011 03:59 PM
முதலாவது திருமண வாழ்த்துக்கள் .
Reply : 0 0
vuthayakanthan Sunday, 10 July 2011 08:11 PM
"16ம் பெற்று பெருவாழ்வு வாழ்க. கார்த்திக்" ....
by உதயன்.
by உதயன். ')">Reply : 0 0
siha Saturday, 16 July 2011 02:25 AM
-------ஹாப்பி வாட்டிங் டே harthi-சிஹா.
Reply : 0 0
FATHIMA IMNA Friday, 22 July 2011 10:52 PM
ஹாப்பி வெடிங் டே.
Reply : 0 0
fazna06 Saturday, 23 July 2011 01:08 AM
நன்றாக இருங்கள்
Reply : 0 0
fazna06 Saturday, 23 July 2011 01:12 AM
பிரபு மாதிரி இல்லாம நன்றாக இருங்க
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago