Menaka Mookandi / 2011 ஜூலை 06 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் அது தீர வேண்டும் என்று கடவுளை வேண்டி பிரார்த்தனை செய்யும் வழக்கமும் நம்பிக்கையும் நாம் அனைவருக்கும் உண்டு. நடிகை நயன்தாரா மட்டும் அதற்கு விதி விலக்கா என்ன? கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த நயன்தாரா, வாரந்தோரும் தேவாலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடும் அதேவேளை தனக்கு பிரச்சினை வரும் போதுகூட அது தீர வேண்டும் என்று தேவாலயத்தில் பிரார்த்தனைகளை மேற்கொள்வதில் அதிக நம்பிக்கை கொண்டவர்.
இவ்வாறு தனது மதத்தில் தீவர நம்பிக்கையுடன் வாழ்ந்துவரும் நயன், தற்போது மதம் மாறவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. காரணம் காதல் தான். ஆம், பிரபுதேவாவை அடுத்த மாதம் திருமணம் செய்துகொள்ளவுள்ள நயன்தாரா, இந்து மதத்துக்கு மாறவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பிரபுதேவாவுக்காக அவரது முதல் மனைவி ரம்லத் இந்து மதத்துக்கு மாறியது போல, அடுத்து திருமணம் செய்யப் போகும் நயன்தாராவும் மாறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
1996ஆம் ஆண்டு, முஸ்லிம் பெண்ணான ரம்லத்தை திருமணம் செய்தார் பிரபுதேவா. பின்னர் அவர், பிரபுதேவா மற்றும் அவரது குடும்பத்தினருக்காக இந்து மதத்துக்கு மாறிவிட்டார். அது மட்டுமா? தன் பெயரையும் லதா என்று மாற்றிக்கொண்டார்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு, நயன்தாராவை காதலிக்க ஆரம்பித்தார் பிரபுதேவா. இதனால் ரம்லத்துக்கும் அவருக்கும் சண்டை ஏற்பட்டு, விவாகரத்து வரை அவர்களின் விவகாரம் சென்றுள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் நீதிமன்றமே அவர்கள் பிரிந்து வாழ்வதற்கான அனுமதியினை வழங்கவுள்ளது.
இந்நிலையில் அடுத்த மாதம் நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத்தின் போது, நயன்தாரா இந்து மதத்துக்கு மாறிவிட வேண்டும் என்பது பிரபுதேவா குடும்பத்தினரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. திருமணமும் இந்து முறைப்படிதான் நடக்க வேண்டும் என தெரிவித்துவிட்டார்களாம்.
இதற்கு நயன்தாரா சம்மதித்துவிட்டாரா என்பது தெரியவில்லை. அவர் சம்மதிக்காவிட்டால் முதலில் கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றிக்கொண்டு, பின்னர் இந்து முறைப்படி திருமணம் செய்வார்களாம். இப்படி மதத்தில் தீவிர பக்தையான நயன்தாரா, காதலுக்காக தனது காதலுக்காக மதத்தையே விட்டுக்கொடுக்க தயாராகிவிட்டார் போல.
.jpg)
.jpg)
.jpg)
mafas Thursday, 07 July 2011 05:42 PM
இது காதலுக்காக வேண்டி அல்ல இது பணத்துக்காத்தான்..
Reply : 0 0
fahee Friday, 08 July 2011 05:50 PM
இது சுத்த பைத்தியகார தனம் ,நயன் கும் ரம்லத்தின் கெதி தான் :D
Reply : 0 0
Stephan Sunday, 10 July 2011 04:23 PM
வாழ்க்கை வாழ்வதற்கு தான்,ஆனால் மற்றவரின்வரின் வாழ்க்கையை பறித்து வாழக்கூடாது.
Reply : 0 0
witten by christy Monday, 11 July 2011 01:17 AM
இன்று ரம்லத்தின் நிலை நாளை உனக்கு, வாழ்கை வாழ பறிக்க அல்ல.
Reply : 0 0
IBNU ABOO Monday, 11 July 2011 03:29 AM
தன் காதலுக்காக தன் மதத்தை துறந்து வந்த முதல் மனைவியை காதல் எனும் வேடத்தில் மயக்கும் பச்சை காமத்துக்காக அந்த அபலை பெண்ணை தவிக்க விட்டவரை நம்பி இப்போது தன் மதத்தை கைவிட்டு இவரோடு வாழவரும் பெண்ணேஇ நாளை எந்த மத பெண்ணை இவர் காதலித்துஇ காமப்பித்து பிடித்து உன்னை அம்போ எனக்கை விட்டு ரம்லத்தின் நிலை வராது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
Reply : 0 0
rr Tuesday, 12 July 2011 07:44 AM
வெளங்கும் சுணங்கும்
Reply : 0 0
surais Tuesday, 12 July 2011 05:43 PM
நயன் ஒரு துரோகி.................
Reply : 0 0
Reyaas Wednesday, 13 July 2011 06:02 PM
இவரை நம்பாதே, ரம்லதுக்கு செய்த துரோகத்தை உனக்கும் செய்வார், காதலுக்கு மதம் மாறுபவர்களுக்கு இந்த கெதிதான்.
Reply : 0 0
rasmin Sunday, 17 July 2011 11:08 PM
காதல் காசு உள்ள வரை.
Reply : 0 0
luxshman Tuesday, 19 July 2011 02:53 AM
நயன் நடிப்பை விட்டு குடும்பப் பெண் ஆகி தன் வருமானத்தை விடுவது தற்கொலைக்கு சமம். பிரபு நயனை விட அழகான இளமையான ஒருத்தியை கண்டதும் நயனுக்கு டாட்டா காட்டுவார்இ இது நிச்சயம்.
Reply : 0 0
jazz Tuesday, 19 July 2011 10:26 AM
கள்ளி வெள்ளி....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .